Ticker

6/recent/ticker-posts

TN POLICE RECRUITMENT 2019 | தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் 6000 காலிப்பணியிடங்கள்

TN POLICE RECRUITMENT 2019 - 6000 Vacancies

தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் 6,000 காலிப்பணியிடங்கள்

 

TNUSRB 2019 Recruitment for 6000 Vacancies

           தமிழக காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், 6,000 பேரை தேர்வு செய்ய, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

            தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைக்கு, எஸ்.ஐ.,க்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இரண்டாம் நிலை காவலர் என்ற நிலையில், 2017ல், 15 ஆயிரத்து, 621 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, இந்த ஆண்டு, நவ., 23ல், 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டு, காவலர் பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.அதே நேரத்தில், காவலர் பணி ஓய்வு காரணமாக, காவல் துறை,சிறைத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட மூன்று துறைகளிலும், காலி பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. 
        
     இப்பணியிடங்களை நிரப்ப, 6,000 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.. இதற்கான ஆயத்த பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன.
கல்வித்தகுதி
     
   10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு

 வயது வரம்பு

1. பொது வகுப்பினர் (General) – 18 வயது நிறைவு பெற்றவராக மற்றும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 


2.பிற்படுத்தப்பட்ட(BC) / மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC) / சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் – 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.


3. ஆதிதிராவிடர்(SC) / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடினர் வகுப்பினைச்(ST) சார்ந்தவர்கள் – 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.


4. ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் – 18 வயது நிறைவு அடைந்தவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.


5. முன்னாள் ராணுவத்தினர் / மத்திய துணை ராணுவப்படையினர் – 45 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION

       காவலர் தேர்வு பற்றிய அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டவுடன்  நமது WEBSITE-ல் UPDATE செய்யப்படும்.