Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 22,420 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலி பணியிடங்கள்

Tamilnadu Police Vacancy Details 2019 

 

நாடு முழுவதும் ஐந்தரை லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, போலீஸ் பணியிடங்கள் காலி நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தேதியில், நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 51 ஆயிரத்து 332 ஆகும். அதில், 5 லட்சத்து 28 ஆயிரத்து 396 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாநில அளவில், உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 286 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 492 ஆகும்.

தமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 ஆகும். 
அதில், 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கர்நாடகாவில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 243. அதில், 21 ஆயிரத்து 943 இடங்கள் காலியாக உள்ளன.

ஆந்திராவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 176. இதில், 17 ஆயிரத்து 933 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 407 ஆகும். இதில், 30 ஆயிரத்து 345 இடங்கள் காலியாக உள்ளன.

நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அதிகமாகவே போலீசார் உள்ளனர். ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் 21 ஆயிரத்து 292 ஆகும். ஆனால், அதை விட 941 போலீசார் கூடுதலாக வேலை பார்த்து வருகிறார்கள்.
மாநிலவாரியாக போலீஸ் காலியிடங்கள் எண்ணிக்கை வருமாறு:-

தமிழ்நாடு -  22,420

பீகார்-50,291,
மேற்கு வங்காளம்-48,981

மராட்டியம்- 26,195

மத்தியபிரதேசம்- 22,355

குஜராத்-21,070

ஜார்கண்ட்-18,931

ராஜஸ்தான்- 18,003

அரியானா-16,844

சத்தீஷ்கார்-11,916

ஒடிசா-10,322

அசாம்-11,452

காஷ்மீர்-10,044.