Ticker

6/recent/ticker-posts

போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்துத் தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN POLICE EXAM 2019 | TNUSRB EXAM DATE  2019

 போலீஸ் தீயணைப்பு மற்றும் சிறைத் துறைகளில் காலியாக உள்ள 8888 காலி பணியிடங்களுக்கான  தேர்வு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடக்கிறது இதற்காக அனைத்து தேர்வு மையங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

 எஸ்பி மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 தமிழகத்தில் காலியாக உள்ள  போலீஸ் தீயணைப்பு மற்றும் சிறைத்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 14ஆம் தேதி நடைபெற இருந்தது.  நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தற்போது ஆகஸ்ட் 25ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது.

 இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள துணை  குழுக்கள் பார்வையிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 மொத்தமுள்ள 8888 மொத்தம் உள்ள 8888 காலி பணி இடங்களுக்கு சுமார் 4.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 இவர்களுக்கு 1245 தேர்வு இவர்களுக்கு 1245 தேர்வு மையங்களில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது.

Hall Ticket

தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (Hall ticket) வரும் ஆகஸ்ட் 10 முதல் தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்லைன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.