தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் எழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களிலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.
மேற்குறிப்பிட்ட கூட்டுறவு சங்க வேலை வாய்ப்பிற்கான பாடத்திட்டம் வினாத்தாள் வடிவமைப்பு முறை தேர்வு செய்யப்படும் முறை பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தெரிவு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
Question Pattern
எழுத்து தேர்வானது கொள்குறி வகை யில் (Objective type) 200 மதிப்பெண்களுக்கு 170 வினாக்களுடன் பட்டப்படிப்பு தரத்தில் (Degree level standard) அமைந்திருக்கும்.
கால அளவு : 180 நிமிடங்கள்
Question Paper Medium
Tamil and English
நேர்முகத் தேர்வு
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முக தேர்வானது 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் 85 சதவீதமும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் களில் 15 சதவீதமும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான Merit List தயார் செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
Exam syllabus
பொதுஅறிவு
பொதுத்தமிழ்
கூட்டுறவு மேலாண்மை
கூட்டுறவுக் கடன் மற்றும் வங்கியியல்
கூட்டுறவு கணக்கியல்
கணினி அடிப்படை அறிவு
மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு தரத்திற்கு ஏற்ப ( Degree Standard ) வினாக்கள் கேட்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிற்கான விரிவான Subject wise syllabus download செய்ய கீழே Click செய்யவும்.
To Download Syllabus : Click here