Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 03.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள் : 25


வயது வரம்பு:


இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2019 தேதியின்படி 18 முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

கூட்டுறவுப் பயிற்சி

கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு. விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் கணினிப் பயிற்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.



தேர்வு செயல்முறை:



 எழுத்து தேர்வு


நேர்காணல். எழுத்து தேர்வு 24.11.2019 அன்று நடைபெறும்.



விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.


    விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.



கட்டணம் செலுத்தும் முறை:



Online & Offline



விண்ணப்ப முறை: ஆன்லைன்



விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tvrdrb.in என்ற இணையதளத்தின் மூலம் 03.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.



IMPORTANT LINKS


NOTIFICATION : Click here



Apply Link : Click here