Ticker

6/recent/ticker-posts

10,12 ஆம் வகுப்பு மற்றும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவில் வேலைவாய்ப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற "Inter University Accelerator Centre"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


நிர்வாகம் : Inter University Accelerator Centre

மேலாண்மை : மத்திய அரசு பணி

பணியிட விபரங்கள்: Multi Tasking Staff (MTS) - 03

 கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்

Lower Division Clerk (LDC) - 02

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.



ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

 உதவியாளர் - 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

மூத்த உதவியாளர் - 01

 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.iuac.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

 Inter University Accelerator Centre, Aruna Asaf Ali Mark, New Delhi - 110 067

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.11.2019

Download Notification

Online Apply link