Ticker

6/recent/ticker-posts

தேசிய சுகாதார துறையில் டெக்னிக்கல் அதிகாரி, கிளார்க் வேலை

தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Scientist-C (Non-Medical) (Data Analyst) - 01


சம்பளம்: மாதம் ரூ.51,000

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Public Health, Epidemiology, Statistics, Bio Statistics, Computer Application, Data Science போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.11.2019

பணி: Project Technical Officer (Statistics) - 01

சம்பளம்: மாதம் ரூ.32,000


வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Bio Statistics பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2019

பணி: Project Upper Division Clerk (UDC) - 01

சம்பளம்: மாதம் ரூ.17,000

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிர்வாகத் துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.11.2019

பணி: Project Multi-Tasking Staff - 02

சம்பளம்: மாதம் ரூ.15,800

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.11.2019

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்விற்கு வரும் தகுதியானவர்கள் தங்கள் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR - NIE, Chennai.

IMPORTANT LINKS

Download Notification


Official Website