Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு

 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள  உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மூலம் மட்டுமே
வரவேற்கப்படுகின்றன.



காலியிடங்களின் எண்ணிக்கை:

300


வயது வரம்பு

விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக & 48 வயது மிகாதவராக இருக்க வேண்டும்


கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (10+2+3) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சம்பள விபரம்


உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 9300/- முதல் ரூ. 62000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமே தேர்வு செய்யபடுவர்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கணினி மூலம் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி

22.11.2019



Download Notification

Online Application Link