Ticker

6/recent/ticker-posts

திருச்சியில் 12 ஆம் வகுப்பு தகுதிக்கு நேரடி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய இராணுவம் ஆனது இராணுவ நர்சிங் உதவியாளர், இராணுவ நர்சிங் உதவி கால்நடை, இராணுவ கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பேரணியினை திருச்சியில் நடத்த உள்ளது.

இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கருர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் யு.டி. புதுச்சேரியின் ஒரு மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியானது 07.11.2019 முதல் 17.11.2019 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 17 1/2 முதல் 23 வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 வகுப்புகளில் அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

தேர்வு செயல்முறை:

உடல் தகுதி சோதனை
உடல் அளவீட்டு சோதனை
மருத்துவத்தேர்வு
பொதுவான நுழைவுத் தேர்வு
தகுதியான விண்ணப்பதாரர்கள்  www.joinindianarmy.nic.in என்ற இணைய முகவரி மூலம் 06.10.2019 முதல் 04.11.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Apply Link : Click here

Notification: Download