Ticker

6/recent/ticker-posts

TN TRB Assistant Professor அறிவிப்பு 2019 – 2340 பணியிடங்கள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண். 12/2019, நாள் 28.08.2019 அன்று வெளியிட்டது.

இன்று திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி உள்ள விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 04.10.2019 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்முறையாக விண்ணப்பத்தின் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணையவழியாக பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றபின்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board) ஆனது 2331 காலியாக உள்ள உதவி பேராசிரியர்  (Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.10.2019 முதல் 30.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IMPORTANT LINKS

Online Apply Link : Click here

Old Notification : Click here

New Notification : Click here