Ticker

6/recent/ticker-posts

TN TRB PG Assistant விடைக்குறிப்பு 2019 – வெளியானது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை – ஐ க்கான கணினி வழி தேர்வு 27.09.19, 28.09.19 மற்றும் 29.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-ல் வெளியிடப்பட்டு உள்ளன.

 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 07/10/2019 முதல் 09/10/2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள முகவரியில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிற வழி முறை யீடுகள் ஏற்கப்படமாட்டாது.


Click here for Tentative Answer key

Click here for Objection Link