Ticker

6/recent/ticker-posts

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2019 – அடுத்த வாரம் வெளிவரவுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது டி.என்.பி.எஸ்.சி ஆண்டு திட்டம் 2019 இல் குரூப் 2 ஏ – ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 ஏ (நேர்காணல் அல்லாத பதிவுகள்) க்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.



TNPSC தேர்வு குறித்து சமீபத்திய அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group 2 & 2A தேர்வுகளில் பெரும்பான்மையாக கேட்கப்பட்ட மொழியியல் சார்ந்த வினாக்களுக்கு பதிலாக அறிவு சார் வினாக்கள் அதிக அளவில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி உட்பட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது.?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் Group 2A-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி செயலர் திரு.நந்தகுமார் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அடுத்த வாரத்தில் அதாவது அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ சமீபத்திய அறிவிப்புகளுக்கு அவ்வப்போது நமது வலைத்தளத்தை பார்க்கலாம்