Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



 பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்


கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம்

பாதுகாப்பு அலுவலர்

பட்டதாரி/முதுநிலை பட்டதாரி

குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி,  உளவியல், சமூகப்பணி, சமூகவியல் ஆகிய பாடங்களில் கல்வித் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொழில் கல்வி சமூக நலம் குழந்தைகள் நலம் ஆகிய வற்றில் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சமூகப் பணியாளர்

பட்டதாரி/முதுநிலை பட்டதாரி

குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி,  உளவியல், சமூகப்பணி

ஆற்றுப்படுத்துதல் வழிகாட்டுதல் ஆகிய பாடங்களில் தகுதியுடைய உள்ளது முன்னுரிமை வழங்கப்படும்.

குழந்தைகள் நலம் சார்ந்த பணியில் இரண்டு வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் கணினி பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
 மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்
கல்யாணராமபுரம்  1-ஆம் வீதி
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை 2

விண்ணப்பிக்க கடைசித் தேதி

30.11.2019

IMPORTANT LINKS
Download Notification

Download Application