தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் சத்துணவு திட்டத் துறையில் கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலர் அவர்கள் மூலமாக இது பற்றிய செய்தி குறிப்பு தனித்தனியே வெளியிடப்படும்
பதவியின் பெயர்
சத்துணவு அமைப்பாளர், சமையலர்
காலியிடங்கள்
1101
கல்வித்தகுதி
5-ஆம் வகுப்பு தேர்ச்சி, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம்
அந்தந்த மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள்
தேர்வு செய்யப்படும் முறை
நேரடி நியமனம்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூலமாக அறிவிப்பு வெளிவந்ததும் விண்ணப்பிக்கலாம்