Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி வேலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



மொத்த காலிப் பணியிடங்கள் : 92

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

உதவி பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்கள் : 19

பாதுகாவலர்

காலியிடங்கள் : 73

வயது வரம்பு :

06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி :


உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :

உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :

06.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IMPORTANT LINKS


Download Notification

Online Apply Link