அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (TN TRB) காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் Online மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்குரிய தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 1060 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்களின் வயதானது 57 வரை இருக்கலாம்.
கல்வி தகுதி :
- பொறியியல் / தொழில்நுட்பம் / கட்டிடக்கலை ஆகியவற்றின் பொருத்தமான கிளையில் இளங்கலை பட்டம் அறுபது சதவீதத்திற்கு குறையாத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமானதாகும்.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் வழங்கிய பொருத்தமான பாடத்தில் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ.56100 /- முதல் ரூ.177500 /- வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
தேர்வு / நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 600 /- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300 /-.
IMPORTANT LINKS