Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 10th/Diploma/ITI/Degree படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்



நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

காலிப் பணியிட விபரங்கள்:

புரோபஷனல் அசிஸ்டெண்ட் I

காலியிடங்கள் : 7

துறைகள்:

ஆட்டோமொபைல்,

இன்ஸ்ட்ருமென்டேசன்,

கணினி,

ஐடி, ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதியம் :


நாள் ஒன்றுக்கு 736 ரூபாய் ஊதியம்

புரோபஷனல் அசிஸ்டெண்ட் III : 01

கல்வித்தகுதி தகுதி : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 ஊதியம் : நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் ஊதியம்

கிளார்க் அசிஸ்டெண்ட் :

5 காலியிடங்கள்

ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ருமென்டேஷன், அப்ளைடு சைன்ஸ், ஐடி, ஆபீஸ் டீன் போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதியம் :

நாள் ஒன்றுக்கு 434 ரூபாய் ஊதியம்

பியூன் (மெக்கானிக்) : 01

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி :

கனரக வாகன ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

 ஊதியம் : நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் ஊதியம்

பியூன் :

4 பணிகள்

துறைகள்:


ஏரோஸ்பேஸ், ஆட்டோமொபைல், ஐடி, கம்ப்யூட்டர் டெக்னாலாஜி கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு படித்தவர்கள் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

 நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் ஊதியம்

லேபரர் : 01

பணிகள் : ஏரோஸ்பேஸ் இன்ஜினிரிங் துறை

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்புக்குக் குறைவாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.296 ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Dean,
 Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet, Chennai - 600 044

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

2019 டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Important Links


Download Notification and application