Ticker

6/recent/ticker-posts

இந்திய உணவுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய உணவு கழகத்தில் மண்டலம் வாரியாக காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் கிரேடு II, தட்டச்சர் (ஹிந்தி), கணக்காளர், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 585 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்:

585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39)


வயது வரம்பு:

01.07.2029 தேதியின்படி  28க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு


தகுதிகள்

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை:

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு மண்டலத்தின் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இணைப்புகள்

Download Notification

Apply Online