இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (Indian Agricultural Research Institute) ஆய்வக மற்றும் களப்பணி உடனாள் (Lab cum field attendant) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் பெயர்:
களப்பணி உடனாள்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.
தேர்வு செயல்முறை:
ஏற்கனவே பணி அனுபவம் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கருதப்படும். நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.
முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application