Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடுஅரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு


அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3,624 ஆசிரியர்கள் நியமனம் செய்ய அனுமதி!



தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிகமாக, தொகுப்பூதிய அடிப்படையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நியமித்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 3,624 தமிழ் வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து, தகுதியான நபர்கள் பட்டியல் பெறப்படும் வரை, மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு வழியாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், அந்த இடங்களில் ஆசிரியர்களை நிரப்பிக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.


அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, 8.15 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இந்த மாதம் முதல் ஏப்ரல் வரை, மூன்று மாதங்களுக்கு மட்டும், ஒப்பந்த அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க, அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.