தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் மூலம் தொடக்க வேளாண்மை துறை மற்றும் கூட்டுறவு நகர வங்கி ஆகியவைகள் மூலம் தமிழகஅரசு நிரந்தரமான அரசு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டத்திற்கும் விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த வேலைவாய்ப்பு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி 10.05.2020 ஆகும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாவட்டத்திற்கு அறிவித்த வேலைவாய்ப்பை மற்றொரு மாவட்டத்திலுள்ள வரும் விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி
வகை:- தமிழ்நாடு அரசு
மொத்த காலி பணியிடங்கள்
81+55=136
பணியிடம்:- கோயம்புத்தூர்
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறை:- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
கடைசி நாள்:- 10.05.2020
கல்வித் தகுதி/ வயது வரம்பு/ சம்பள விபரம்/ விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல்களை கீழே காணலாம்.
பணிகள்:-
1. உதவியாளர்
2. இளநிலை உதவியாளர்
3. மேற்பார்வையாளர்
மேற்கண்ட பணிகளை சேர்த்து மொத்தம் 81 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:-
Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
1. மேற்கண்ட தகுதி இல்லை என்றால் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
2. நேரடியாக B.com கூட்டுறவு/M.com கூட்டுறவு/BA கூட்டுறவு/MA கூட்டுறவு படித்து இருந்தால் மேற்கண்ட தகுதிகள் தேவை இல்லை.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.OC வகுப்பினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். மற்ற வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. தளர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு ரூ.10,000/- முதல் 54,000/-வரை வழங்கப்படும்.
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பிறகு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உங்களின் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:-
1.SC/SCA/ST/PWD/ALL WOMENS ஆகியவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
2. மற்ற வகுப்பினர் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
IMPORTANT LINKS