Ticker

6/recent/ticker-posts

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

இந்திய வனத்துறையில் 2020 ஆண்டிற்கான நிரந்தரமான வேலை வாய்ப்பு ஒன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.


வேலைவாய்ப்பு விவரம்

அமைப்பின் பெயர்:

Himalayan Forest Research Institute

வகை:- மத்திய அரசு

மொத்த காலி பணியிடங்கள்:- 08

கடைசி நாள்:- ஜூன் 15

பதவியின் பெயர் 

1.Technical Assistant-01 Vacancy

2.Forest Guard-05 Vacancy

3.Multi-Tasking Staff(MTS)-02 Vacancy

Total Vacancy-08

கல்வித் தகுதி:

Technical Assistant:

அறிவியல் துறையில் பட்டம் படித்தவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம்.
எந்தவித அனுபவம் தேவையில்லை.

Forest Guard:

பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வனகாப்பாளர் என்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு உடற்தகுதி தேர்வுகளும் உண்டு.

Multi-Tasking Staff(MTS):


பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதியாக 3 வருடம் பணி அனுபவம் வேண்டும்.
மேற்கண்ட கூடுதல் தகுதி இல்லை என்றாலும் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதி இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பள விவரம்:-

Technical Assistant என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.29,200/- முதல் 92,300/- வரை வழங்கப்படும்.

Forest Guard என்ற பணிக்கு மாதச் சம்பளம் ரூ.19,900/- முதல்63,200/- வரை வழங்கப்படும்
Multi-Tasking Staff(MTS) என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.18,000/- முதல் 56,900/- வரை வழங்கப்படும்.

இது ஒரு நிரந்தர பணி என்பதால் படிகளும் வழங்கப்படும்

வயது வரம்பு:-

Technical Assistant என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Forest Guard என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Multi-Tasking Staff(MTS) என்ற பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அறிவிப்பில் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:-


மேற்கண்ட மூன்று பணியிடங்களில் எந்த பணிக்கு உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டு அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் Fill செய்யுங்கள்.

உங்களின் புகைப்படத்தை விண்ணப்ப படிவத்தில் வலதுபுறம் கொடுக்கப்பட்ட கட்டத்தில் ஒட்டவும்.

முக்கியமாக நீங்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்தப் பணியின் பெயரை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முதல் இடத்தில் பதிவு செய்யுங்கள்.

இந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு உங்களின் சான்றிதழ்கள் நகல் எடுத்து விண்ணப்ப படிவத்தின் பின்பக்கத்தில் அதனை இணைத்து மற்றும் உங்களின் Self Address Copy இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அவர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் மற்றும் அந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

அந்தந்த பணிக்கான தேர்வு விவரம் மற்றும் பாட திட்டம் அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் எந்த பணிக்கு தகுதியுடையவர்கள் என்று பார்த்துவிட்டு அதற்கேற்றார்போல் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION