Ticker

6/recent/ticker-posts

நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் நபார்டு வங்கி மூலம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக ஐந்து விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடி பணி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

1.Team Leader (Agriculture Engineering) 01

2 Associate Project Consultant (Irrigation/Agriculture) 01

3 Associate Project Consultant (MIS) 01

4 Data Manager 01

5 Assistant Data Manager 01

Total Vacancies 05

வயது வரம்பு:

Team Leader (Agriculture Engineering) என்ற பணிக்கு 55 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கீழ் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.


Associate Project Consultant (Irrigation/Agriculture) என்ற பணியிடத்திற்கு 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் அதற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Associate Project Consultant (MIS) என்ற பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மீதமுள்ள இரண்டு பணிகளுக்கும் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Team Leader (Agriculture Engineering) என்ற பணிக்கு மாத சம்பளம் Rs.55,000/- வழங்கப்படும்.

Associate Project Consultant (Irrigation/Agriculture) என்ற பணிக்கு மாத சம்பளம் Rs.50,000/- வழங்கப்படும்.

Associate Project Consultant (MIS) என்ற பணிக்கு மாத சம்பளம் Rs.40,000/- வழங்கப்படும்.

Data Manager என்ற பணிக்கு சம்பளம் Rs.25,000/- வழங்கப்படுகிறது.
Assistant Data Manager என்ற பணியிடத்திற்கு சம்பளம் Rs.20,000/- வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

Team Leader (Agriculture Engineering) என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டத்தை வேளாண்மை துறையில் பெற்றிருக்கவேண்டும்.


Associate Project Consultant (Irrigation/Agriculture) என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டத்தை வேளாண்மை அல்லது பொறியியல் துறையில் பெற்றிருக்க வேண்டும்.
Associate Project Consultant (MIS) என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் B.E/B.TECH/BBA/BCA அல்லது MCA/MBA முடித்திருக்க வேண்டும்.

Data Manager என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். கூடுதலாக கணினி அறிவு இருக்க வேண்டும்.

Assistant Data Manager என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். கூடுதலாக தகவல் நுட்பம் மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நேர்காணல் எப்போது எங்கு நடைபெறும் என்பதை உங்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

விண்ணப்பதாரர்கள் ஐந்து விதமான பணிகளுக்கும் தனித்தனியாக லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி நேரடியாக தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பத்தில் அனைத்து விபரங்களையும் பதிவு செய்தபிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


For more Job notification click here