தமிழக அரசு கூட்டுறவுத்துறை ஒருங்கிணந்த
வேலூர் மாவட்டத்தில் உள்ள
வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வமான
நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர் மற்றும்
ராணிப்பேட்டை மாவட்டங்களில் கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலை
கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Person ) மற்றும் கட்டுநர்கள் (Packer ) பதவிகளுக்கு நேரடி வேலை நியமனம் செய்வதற்க்கான விண்ணப்பங்கள்
31-07-2020 பிற்பகல் 5.45 மணி
வரையும் இந்த வேலைக்கு
விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு மொத்தம் இரண்டு விதமான பதவிகள்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
பதவிகளுக்கு மொத்தம் 191 காலிபணியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த
காலிப்பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்
1.விற்பனையாளர் (Sales Person)
2.கட்டுநர்
(Packer )
காலிபணியிடங்கள் விவரம்
1.விற்பனையாளர்
– 166
2.கட்டுநர்
– 25
சம்பளம்
விற்பனையாளர்கள்
ஓராண்டுக்கு
தொகுப்பூதியம் 5000/-
ஓராண்டுக்குப்
பிறகு ஊதிய விகிதம் 4300/- – 12000/-
கட்டுநர்
ஓராண்டுக்கு
தொகுப்பூதியம் 4250/-
ஓராண்டுக்குப்
பிறகு ஊதிய விகிதம் 3900/- – 11000/-
கல்வித்தகுதிகள்
1. விற்பனையாளர்
பதவிக்கு 12-ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2.கட்டுநர்
பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் (Application Fee)
1.விற்பனையாளர்
பதவிக்கு ரூ.150
விண்ணப்பக்கட்டணம்
2.கட்டுநர்
பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்
இந்த விண்ணப்பக்கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டிடி (DD) எடுக்க வேண்டும்.
DD எடுக்க
வேண்டிய முகவரி
:
District Recruitment Bureau, Vellore
என்ற
பெயரில் வரைவோலையாக (Demand Draft ) எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்
இணைத்து அனுப்ப வேண்டும்,
விண்ணப்ப படிவத்தின்
எண் மற்றும் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கான பெயர்
மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் இடம்
விண்ணப்பப் படிவத்தை
18-06-2020 முதல் 31-07-2020 வரை அனைத்து வேலைநாட்களிலும் அனைத்து வேலை நேரங்களிலும் நேரில் சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
வேலுர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
கூட்டுறவு சங்கங்களின் மண்டல
இணைப்பதிவாளர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
வேலூர் - 9
விண்ணப்பங்கள் வந்து
சேர கடைசி
தேதி
31.07.2020