Ticker

6/recent/ticker-posts

விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு

தமிழகஅரசு கூட்டுறவுத்துறை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்புக்கானஅதிகாரபூர்வமானநோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது.






விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Person ) மற்றும் கட்டுநர்கள் (Packer ) பதவிகளுக்கு நேரடி வேலை நியமனம் செய்வதற்க்கானவிண்ணப்பங்கள் 15-07-2020 பிற்பகல் 5.45 மணி வரையும் இந்தவேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசு ரேசன் கடை வேலைவாய்ப்பு
 
இந்தவேலைக்கு மொத்தம் இரண்டு விதமானபதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 105 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த​  காலிபணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்கள்


1.
விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)

2.கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )






காலிபணியிடங்கள் விவரம்

1.விற்பனையாளர் –  94

2.கட்டுநர்  – 11


கல்வி தகுதிகள்

1. விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2.கட்டுநர்  பதவிக்கு  10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக்கட்டணம் (Application Fee)



1.விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2.கட்டுநர்  பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்

இந்தவிண்ணப்பக்கட்டணம் தேசியமயமாக்கப்பட்டவங்கிகளில் டிடி (DD) எடுக்கவேண்டும்


DD எடுக்கவேண்டியமுகவரி

District Recruitment Bureau, Virudhunagar

 என்றபெயரில் வரைவோலையாக​ (Demand Draft ) எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்பவேண்டும், விண்ணப்பபடிவத்தின் என் மற்றும் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கானபெயர் மற்றும் விண் ணப்பதாரரின் பெயர் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்படவேண்டும்.


விண்ணப்பப் படிவம் கிடைக்கும் இடம்

விண்ணப்பப் படிவம் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலுவலகங்களில் 18-06-2020 முதல் 15-07-2020 வரை அனைத்து வேலைநாட்களிலும் அனைத்து வேலை நேரங்களிலும் நேரில் சென்று இலவசமாகபெற்றுக்கொள்ளலாம்.

1. விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, விருதுநகர்

2. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம், விருதுநகர்.

3. புளியம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை, அருப்புக்கோட்டை.

4. காரியாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.

5. திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.

6. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நரிக்குடி கிளை.

7. திருவில்லிபுத்தூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்.

8. சிவகாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்.

9. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சாத்தூர் கிளை.

10. தாயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.

11. வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டக சாலை.

12.ராஜபளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

விண்ணப்படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
விருதுநகர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி

15.07.2020




SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL