Ticker

6/recent/ticker-posts

வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா் நிலை 3 (Lab Technician 3 ) ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரப் பணிகளில் எவ்வித தடையுமின்றி செயல்படுத்த வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன

இப்பணியிடங்களுக்கு காலியாக உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்), பி பிளாக், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேலூா் – 632 009 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


இந்தப் பணியிடங்களுக்கு முப்படைகளில் மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.