CECRI – காரைக்குடி வேலைவாய்ப்பு 2020 !
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் SRF, JRF, Project Associate & Project Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதவியின் பெயர் :
SRF, JRF, Project Associate & Project Assistant பதவிக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்கள்
அனைத்து பதவிகளிலும் சேர்த்து மொத்தம்
29 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
11.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 32 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
M.Sc. in Physics / Chemistry / Master Degree/ B.Tech. in Chemical Engineering முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் நேர்காணல் ஆனது 13 ஆகஸ்ட் 2020 முதல் 17 ஆகஸ்ட் 2020 வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://cecri.res.in/ என்ற இணைய தள முகவரி மூலம் 11.08.2020க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
IMPORTANT LINKS