தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களைப் பெற கூட்டுறவுப் பட்டயப் பயிற்சி அவசியமான தகுதியாகும்.
இந்தப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. இதற்கான தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பப் படிவம் போன்ற அனைத்து தகவல்களும் இந்தப் பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
படிப்பின் பெயர்
கூட்டுறவுப் பட்டயப் பயிற்சி
கால அளவு
36 வாரங்கள் / 400 மணி நேரம்
கல்வித்தகுதி
+2 தேர்ச்சி
வயது வரம்பு
குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பயிற்றுவிக்கும் முறை
முழு நேரம்
பயிற்சிக் கட்டணம்
ரூ.14850/-
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்
1.கூட்டுறவு
2.கூட்டுறவு சட்டங்கள்
3.நிதி கணக்கியல் மற்றும் தணிக்கை
4.கூட்டுறவு மேலாண்மை
5.கணினி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு
6.வியாபார
வளர்ச்சித் திட்டம் மற்றும் கொள்கைகள்
7.நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்ப் வேண்டும்.
பயிற்சி மையங்கள்
தமிழகம் முழுவது 21 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பயிற்சி மையங்களின் முழுமையான முகவரி விண்ணப்பப் படிவத்தின் விளக்கக்
குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS