தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020 !
வன்முறையால்
பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம்
‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய மைய நிர்வாகி (Centre
Administrator) மற்றும் வழக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
மைய நிர்வாகி
வழக்கு அலுவலர்
தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
மைய நிர்வாகி (Centre Administrator) – 01
வழக்கு அலுவலர் – 01
கல்வித்தகுதி:
மைய நிர்வாகி (Centre Administrator):
சமூகப் பணியில்
முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
வழக்கு
அலுவலர் :
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in
Social Work) பெற்றிருக்க
வேண்டும்.
தமிழக அரசு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
அனுபவம்:
மைய நிர்வாகி (Centre
Administrator):
உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில்
பெண்கள் பிரச்சினைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும்
அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில்
குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு
நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம்
உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
வழக்கு அலுவலர் :
உளவியல்
ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development
Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும்
அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1
வருட முன்அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது
வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க
வேண்டும்.
மாதச்சம்பளம்:
மைய நிர்வாகி (Centre
Administrator) – ரூ.30,000/-
வழக்கு அலுவலர் -ரூ.15,000/-
தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 25.09.2020 மாலை 5.00 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 8-வது தளம்,
சிங்காரவேலன் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை-01
என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
FOR MORE JOBS CLICK HERE