நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை
நலத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த
துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன விடுதிகளில்
காலியாக உள்ள சமையலர் (ஆண்,பெண்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
சமையலர் (ஆண்) –
11
சமையலர் (பெண்) – 08
வயதுவரம்பு:
01.07.2020
தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில்
அனுமதிக்கப்பட்டவாறு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
தமிழில்
எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும்,
சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன்
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:
கல்வி தகுதி சான்று மற்றும்
வயது சான்று
சாதிச்சான்றிதழ்
முன்னுரிமை சான்றிதழ்
ஆதார்
அட்டை
குடும்ப அட்டை, இருப்பிட சான்று
வேலை வாய்ப்பக பதிவு
(இருப்பின்)
சமையல் பணியில் முன் அனுபவ சான்றிதழ்
விண்ணப்பிக்கும்
முறை:
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன்
தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர்
அலுவலகம்,
நாகப்பட்டினம்.
IMPORTANT LINKS