தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய வேலைவாய்ப்பு 2020 !
தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர்
(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள்
மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், தொழிலாளர்
உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில்
காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும்
திறமையான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் 30.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
பதிவுரு எழுத்தர்
ஓட்டுநர்
காலிப்பணியிடங்கள்:
பதிவுரு எழுத்தர் –
37
ஓட்டுநர் – 32.
இப்பணிக்காலியிடங்களுக்கு
இடஒதுக்கீட்டு விதிகள் பொருந்தும், அரசாணையின்படி மாற்றுத் திறனாளிகளுக்கென 4%
பணியிடங்கள் ஒதுக்கப்படும். (ஓட்டுநர் பணியை தவிர)
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு
தகுதிகள் :
வயது வரம்பு:
01.07.2020 அன்றுள்ளபடி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதி:
பதிவுரு எழுத்தர்:
பத்தாம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி (8th pass) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம் (இலகு ரக(LMV) ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டது)
குறைந்தது இரண்டு வருடம் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம்
வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
சம்பளம்:
பதிவுரு எழுத்தர் : 15900 – 50400
ஓட்டுநர் : 19500 – 62000
தேர்வு செய்யும் முறை:
ஓட்டுநர்:
தேர்வு / நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலும் ஓட்டுநர் திறன் தேர்வின் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் தரவரிசைப்படி தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்முக தேர்வுக்கு, ஓட்டுநர் திறன் தேர்விற்கும், தங்களது சொந்த செலவில் வர வேண்டும்.
பதிவுரு எழுத்தர்:
தேர்வு / நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு வாரியத்தால் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் பதவி வாரியாக தனித்தனியே இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் தரவரிசைப்படி பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்முக தேர்வுகளுக்கு, தங்களது சொந்த செலவில் வர வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.250/-க்கான கட்டண தொகையை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://labour.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இணைப்பில் ((link) உள்ள மேற்படி பதவிகளுக்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான விவரங்களை இணைத்து ரூ.500/-க்கான கட்டண தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE