தமிழக மின்வாரிய வேலைவாய்ப்பு – 2 லட்சம் பேர் எதிர்பார்ப்பு !
தமிழக
மின்வாரியத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர்,
உதவிப்பொறியாளர் மற்றும் களப்பணியாளர் ஆகிய 2400 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தவர்கள் இதற்கான தேர்வு எப்போது
நடைபெறும் என காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு போலீஸில் 10906 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
என்னென்ன பணியிடங்கள் ???
தமிழக மின் வாரியத்தில்
கணக்கீட்டாளர் பதவியில் 1300; இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில் 500;
உதவிப்பொறியாளர் பதவியில் 600 என மொத்தம் 2400 பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். இதற்காக பட்டதாரிகளிடமிருந்து பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை
இணையத்தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை:
கணக்கீட்டாளர் பதவிக்கு,
79 ஆயிரம்; உதவியாளர் கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உதவிப்பொறியாளர் பதவிக்கு மட்டும், அதிகபட்சமாக 1.03 லட்சம், இன்ஜினியரிங்
பட்டதாரிகள் என 2 லட்சத்திருக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா
ஊடரங்கு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, மே மாதம்
ஆன்லைன் தேர்வு நடைபெற வேண்டும். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக
பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு காரணமாக இந்த தேர்வு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வர
வில்லை.
தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு
தேர்வு எப்போது?
தற்போது ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள்
அளிக்கப்பட்டு வருவதாலும், TNPSC யில் தேர்வுகளுக்கான தேதியை அரசு வெளியிட்டு
வருவதாலும் இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.