நகர்ப்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டத்தில் கோவை மாநகராட்சியில் இணைந்து
பயிற்சி பெற பட்டதாரிகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப
கவுன்சில் இணைந்து, நகர்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயிற்சி
பெற படித்தவர்களுக்கு படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும் புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும் இத்தகைய வாய்ப்பு வழங்க கோவை மாநகராட்சி முன்வந்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆக இருக்க
வேண்டும்.
அதிகபட்சம் ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். B.A., B.Sc.,
முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000/- B.E படித்தவர்களுக்கு ரூ.10,000/-
டாக்டர்களுக்கு ரூ.40,000/- செவிலியர்களுக்கு ரூ.12,000/- மாத உதவித் தொகை
வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
டாக்டர்கள் - 15
செவிலியர்கள் - 100
சுகாதார ஆய்வாளர்கள் - 50
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான
காலியிடங்களை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.10.2020
IMPORTANT LINKS