தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வாரியாக ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது ஒவ்வொரு மாவட்ட வாரியாக நேர்முகத் தேர்வு
தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பதவிகளின்
பெயர்
விற்பனையாளர்
கட்டுநர்
நேர்முகத் தேர்வில் என்னென்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம் என்பது பற்றிய
விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Self Introduction
Self Introduction என்னும் இப்பகுதியில் உங்களைப் பற்றிய விபரங்களை
சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற வேண்டும்.
உங்களைப் பற்றிய சுய விபரங்கள் மற்றும் கல்வித் தகுதி பற்றிய விபரங்கள் ஆகிய
தேவையான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
உங்களின் குடும்ப சூழல், வறுமை நிலை இது போன்ற விபரங்களைத் தெரிவிக்க வேண்டிய
அவசியம் இல்லை.
Ration Shop Questions
இப்பகுதியில் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும்
விலைப்பட்டியல் பற்றிய கேள்விகள் கேட்கப்படலாம்.
மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் பற்றிய கேள்விகள் இடம்பெறலாம்.
ரேசன் கடை விடுமுறை நாட்கள் பற்றிய கேள்விகள் கேள்விகள் இடம்பெறலாம்.
தனிநபருக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு பற்றிய தகவல்களும் கேள்விகளாக
கேட்கப்படலாம்.
கட்டுநர் பணியிடங்களைப் பொறுத்தவரை எடை மற்றும் அளவுகள் சார்ந்த வினாக்கள்
கேட்கப்படலாம்.