Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் வேலைவாய்ப்பு

மோட்சகுளம் லட்சுமி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பதவியின் பெயர்

வடிவமைப்பாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

ஒன்று

இனச்சுழற்சி

பொது


வயது வரம்பு

01.07.2020 அன்று உள்ளபடி

குறைந்தபட்ச வயது 18

அதிகபட்ச வயது 35


கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

மற்றும்

கூட்டுறவு பயிற்சி, அடிப்படை கணினி அறிவு

சம்பள விகிதம்

4100 - 19,320 + GP 950


பணியின் தன்மை

நிரந்தரம்


தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு

இப்பணியிடங்களுக்கு நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியலிலுள்ள நபர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை 08.10.2020 முதல் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மோட்சகுளம் லட்சுமி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்,
எண்.இ 2076, 1/125, கடை வீதி,
மோட்சகுளம் - 605 105
விழுப்புரம்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

22.10.2020


முக்கிய குறிப்பு

தகுதி இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் உரிய தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும், உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது.

மேற்கண்ட பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கல்வி சான்றிதழ்

வயது சான்றிதழ் 

அரசாங்கத்தால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்

முன்னுரிமை சான்றிதழ் (இருப்பின்)

இருப்பிட சான்றிதழ்

குடும்ப அட்டை

பணி முன் அனுபவ சான்றிதழ் (இருப்பின்)

அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ் ( புகைப்படம் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும்)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டை

இதர சான்றிதழ்கள்


IMPORTANT LINKS




மேலும் சில வேலைவாய்ப்பு தகவல்கள்