தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சமையலர்
தகுதிகள்:
விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்
கண்டிப்பாக இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சமையற்காரர் பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம்
பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/-
வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பப் படிவங்களை திருக்கோவில் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45
வரை அலுவலக வேலை நேரங்களில் ரூ.100/- கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகல்களுடன் நேரடியாக சமர்ப்பிக்க
வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS