Ticker

6/recent/ticker-posts

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது.

தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான இலவச விண்ணப்பங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஊர்க்காவல் படைக்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு

காலியிடங்கள் :

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு உட்கோட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களில் ஆண், பெண் இருபாலரும் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தவராக இருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி சோதனை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த சோதனைகள் தஞ்சை ஆயுத படை மைதானத்தில் நவம்பர் மாதம் 28ம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.11.2020 அன்றுக்குள் சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், இருப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் சான்றிதழின் நகல் ஆகியவற்றினை இணைத்து தங்களின் விண்ணப்பங்களை அவரவர் உட்கோட்ட காவல் முகாம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான காவல் உட்கோட்ட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த காவல் உட்கோட்ட அலுவலகங்களில் தான் சரியாக தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு


தஞ்சை, வல்லம், திருவையாறு, பூதலூர் – தஞ்சை நகர உட்கோட்டம்

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் – கும்பகோணம் உட்கோட்டம்

பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை உட்கோட்டம்


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS