திருவாரூர் மாவட்ட மாணவர் விடுதிகளில் வேலைவாய்ப்பு 2020
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின்
(ADWO) கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும்
விருப்பமும் உடையவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சமையலர்
துப்புரவுப்
பணியாளர்
காலியிடங்கள்:
சமையலர் - 22
துப்புரவுப் பணியாளர்- 6
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவராக உள்ள
விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
திருவாரூர்
மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சமையலராக அனுபவம்
பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல்
அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் இதர
படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
நேரடியான நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று முறையாகப் பூர்த்தி செய்து உரிய
ஆவணங்களுடன் சமர்ப்பிக்க் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
03.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS