தமிழக அரசு துறைகளில் புதியதாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவி உருவாக்கப்பட உள்ளது. இதற்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த
பதவிகளுக்கான தகுதிகள் மற்றும் நியமன முறைகள் ஆகியவற்றினை கீழே தொகுத்து
வழங்கியுள்ளோம்.
குரூப் – சி பணியாளர்கள் :
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்தாளர்கள், இளநிலை
உதவியாளர்கள் என பல்வேறு குரூப் – சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தட்டச்சு இயந்திரங்களுக்கு பதிலாக கணிணியினையே தற்போது பயன்படுத்தி
வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையில் புதிய வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு, அல்லது ஒன்றில்
ஹையர் மற்றொன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி போன்ற தகுதிகள் அடிப்படைத் தகுதிகளாக
இருந்தது.
மேலும் தமிழக தொழில்நுட்ப கழகத்தின் கணினி தேர்ச்சி
சான்றிதழ் அவசியமாகும்.
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் :
ஆனால் தற்போது இதில் தகவல்களை கையாளுவதற்கென புதிதாக டேட்டா என்ட்ரி
ஆப்ரேட்டர்கள் என்ற புதிய பதவியினை அரசு துறை உருவாக்கி உள்ளது. தமிழக அரசு
துறைகளில் மட்டுமில்லாது மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் இந்த டேட்டா
என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிகள் உருவாக்கப்பட உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு
தகுதிகள் :
தமிழக அரசின் துறைகளில் பணியிடம் பெற பட்டப் படிப்புடன், தமிழ் ஆங்கிலத்தில்
ஹையர் கிரேடு மற்றும் டேட்டா என்ட்ரி பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கான
சான்றிதழ் என அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசின்
துறைகளில் பணியிடம் பெற 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணிணியில் 8000 ஸ்ட்ரோக்
தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கண்ட கல்வித்தகுதிகளுடன் அரசு
பணிகள் விதிகளில் திருத்தும் செய்யப்பட்டு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிகள்
உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DOWNLOAD PAPER ARTICLE
CLICK HERE FOR MORE JOBS