Ticker

6/recent/ticker-posts

TNPSC முக்கிய அறிவிப்பு – குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு !

TNPSC முக்கிய அறிவிப்பு – குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தட்டச்சு பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வை நிவர் புயல் காரணமாக ஒத்திவைத்துள்ளது.

சென்ற வருடம் நடைபெற்ற TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு, கொரோனா காரணமாக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


நிவர் புயல்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலால் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன. ஏற்கனவே பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து தேர்வுகளை ஒத்திவைத்து வருகின்றன. இந்த தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


TNPSC குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு:

நிவர் புயல் காரணமாக, நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெற இருந்த குரூப் 4 தட்டச்சு பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஒத்தி வைக்கப்பட்ட TNPSC குரூப் 4 கலந்தாய்வு டிசம்பர் 8 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


Click Here for TNPSC Official Announcement