ஆவின் நிறுவனத்தில் 460 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க 05.12.2020 இறுதி நாள் என முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இப்பணியிடங்களுக்கு 11.12.2020 மாலை 5.30 மணி வரை
விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை ஆவின் நிறுவனம் வழங்கி உள்ளது. இதுவரை
விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Senior Factory Assistant (Dairying) 170
Senior Factory Assistant (Lab) 20
Senior Factory Assistant (Animal Husbandry) 70
Senior Factory Assistant (Admn.) 70
Senior Factory Assistant (Marketing) 60
Senior Factory Assistant (Engg.) 70
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல்
அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் வயது தளர்வு
பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி:
இந்த பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு / டிகிரி முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். மேலும் முழு தகுதி பற்றிய விபரங்களுக்கு கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
மாத ஊதியம்:
Senior Factory Assistant –
ரூ.15700-50000
விண்ணப்பக் கட்டணம்:
General – Rs.250
SC/ST/PWD – Rs.100
விண்ணப்பிக்கும் முறை:
ஆவின் நிறுவனத்தில் Senior Factory Assistant எனப்படும் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம்
11.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆன்லைனில்
விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. விண்ணப்பப் படிவத்தை Print out எடுத்து
அனுப்பத் தேவையில்லை.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS