Ticker

6/recent/ticker-posts

8,10-வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

 8,10-வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

விருதுநகர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் :


Senior Factory Assistant

Manager

Deputy Manager

Technician

Junior Executive

Extension Officer

Executive

உட்பட பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயது வரை உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

Senior Factory Assistant – 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician – 8வது/10வதுதேர்ச்சியுடன் ITI/ Diploma தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


Junior Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும் Typewriting தேர்ச்சியும் கட்டாயமாகும்.


Extension Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருக்க வேண்டும். அதனுடன் Cooperative Training பெற்றிருக்க வேண்டும்.


Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BE/ B.Tech/ PG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் PG/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Manager – MBA/ CA/ ICWA/ BE/ B.Tech பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.



ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஊதிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையிடவும்.



தேர்வு செய்யும் முறை :

ஆவின் நிறுவனத்தின் இப்பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம் :


General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


பொது மேலாளர்,

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,

ஸ்ரீவில்லிப்புத்தூர்,

விருதுநகர் -626 125

என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி:


07.01.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS