Ticker

6/recent/ticker-posts

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையம் ஆனது ஒரு வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ள பட்டதாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள்:

பிபிஓ, கல்வி, மின், வர்த்தகம், சந்தைப்படுத்துதல், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, மனிதவள மேம்பாடு ஆகிய துறை சம்பத்தப்பட்ட பல தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளன.


வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேலான தகுதிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாதம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


முகாம் நடைபெறும் நாள்:

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.


குறிப்பு:

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விதமான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.