தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கீழ் இயங்கும் கிராம நிர்வாக
அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
காலியிடங்கள் உள்ள கிராம ஊராட்சிகள்
சூலூர் ஒன்றியம்
கரவளி மாதப்பூர்
செம்மாண்டாம்பாளையம்
அப்பநாயக்கன்பட்டி
பச்சாபாளையம்
போகம்பட்டி
இடையர்பாளையம்
செலக்கரச்சல்
செஞ்சேரிப்புத்தூர்
வதம்பச்சேரி
ஜல்லிப்பட்டி,
தாளக்கரை
அன்னூர் ஒன்றியம்:
ஆம்போதி
குப்பனூர்
வடக்கலூர்
காட்டம்பட்டி
பிள்ளையப்பன்பாளையம்
மசக்கவுண்டன்செட்டிபாளையம்
காரேகவுண்டம்பாளையம்
கொண்டையம்பாளையம்
கீரணத்தம்
வயது வரம்பு:
வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக
பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி
ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்
அந்தந்த வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது,
சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்
அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.12.2020
CLICK HERE FOR MORE JOBS