Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக ஆபீசில் வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலியிடங்கள் உள்ள கிராம ஊராட்சிகள்

கொல்லப்பட்டி

குட்டம்

வேல்வார்கோட்டை

தென்னம்பட்டி

இராமநாதபுரம்


வயது வரம்பு:

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இனச்சுழற்சி:

கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.

குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி பா.ஆ.லதா அவர்கள் தெரிவித்துள்ளார்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS