தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியிடங்கள் தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள்
நியமனம்; ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக சேர முடியாது
தமிழ்நாடு
மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம்
மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 30,000 இடங்கள் தனியாருக்கு
செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
தமிழக மின்சார வாரியத்தில் Helper, Wireman போன்ற பதவிகளில் மொத்தமாக 12000 காலியிடங்கள் வரை நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் நியமனம்:
மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி, ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக மின்துறை.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில்
இருப்பார்கள்.
சம்பளம் எவ்வளவு..?
இப்படி
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412/-
என்ற அடிப்படையில் மாதச் சம்பளமாக ரூ.12,360/- ஊதியமாக வழங்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தில் தடங்கல்
இன்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம்
என அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேரடி நியமனம் என்ணாச்சு..?
மின்வாரியத்தின் இந்த அறிவிப்பில் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக
மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.டி.ஐ படித்து பல இளைஞர்கள் மின் வாரியத்தில் பணி
கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் தமிழக அரசின்
அறிவிப்பு அதிர்ச்சியளித்துள்ளது.