Ticker

6/recent/ticker-posts

+2 படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் அணுசக்தி மையத்தில் வேலை

 +2 படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் அணுசக்தி மையத்தில் வேலை

தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் NUCLEAR POWER CORPORATION OF INDIA நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

Driver – cum- PUMP Operator-cum-Fireman-A பணிக்கு 4 காலி இடங்கள் உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


இனச்சுழற்சி:

UR - 03

SC - 01


கல்வித்தகுதி:

12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Heavy Driving License மற்றும் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Fire fighting course certificate வைத்திருக்க வேண்டும்.



வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.



மாத ஊதியம்:

இப்பணிக்கு மாதச் சம்பளமாக ரூ.21,700/- ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை:

Driver–cum-PUMP Operator-cum-Fireman-A  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி, வாகன ஓட்டும் திறமை போன்றவை முதலில் சோதிக்கப்பட்டு, பின்னர் தேர்வானவர்கள் முதல் கட்ட  தேர்வுக்கு  (Preliminary Test ) அனுமதிக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Manager (HRM),

HRM Section,

Madras atomic Power Station,

Nuclear Power Corporation of India Limited,

Kalpakkam- 603102.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


25.01.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS