புதுக்கோட்டையில் புதிய வேலைவாய்ப்பு முகாம் – தனியார் நிறுவனங்கள் நடத்தும்
மெகா வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கலை அறிவியல் கல்லூரியில் புதிய மெகா
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான
பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்புகள் :
நாட்டில் படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். அவர்களின் நிலையினை சரி செய்ய மத்திய/ மாநில
அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று போன்றவற்றால் ஏற்பட்ட
ஊரடங்கு உத்தரவு பலரின் வேலைவாய்ப்பினை பறித்துள்ளது.
இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் வேலைவாய்ப்பு
முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை
சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும்
பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள்
தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
கல்வித்தகுதி :
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிகிரி தேர்ச்சி
பெற்றவர்கள் வரை
முகாம் நடைபெறும் நாள் :
23.12.2020
முகாம் நடைபெறும் நேரம் :
காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
முகாம் நடைபெறும் இடம் :
அன்னை தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,
இலுப்பூர்,
புதுக்கோட்டை – 622102.