ஆவினில் விற்பனை நிர்வாகி வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் சேலம் கிளையில்
விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இப்பதிவில்
கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ள நபர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Marketing Executive (விற்பனை நிர்வாகி) பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆண், பெண் இருபாலரும் 35
வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.B.A &
M.B.A (Preferably) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்
மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டுநர்
உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
மாதச்சம்பளம்:
ஆவின் Marketing Executive பதவிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும்.
மேலும், வாகன செலவாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மொபைல்
கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு
விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் தங்கள் அசல்
சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு 31.12.2020 அன்று காலை 10 மணிக்கு
நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Administrative office,
Salem co-operative milk
producers union Ltd.,
Thalavaipatty post,
Sithanur,
Salem-636002.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS