SIPCOT சென்னை வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் என்று அழைக்கப்படும் சிப்காட்
நிறூவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
சிப்காட் நிறுவனத்தில் Consultant பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக
உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டய கணக்காளர்
படிப்பை (Chartered Accountant) முடித்திருக்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது வரை
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
சிப்காட் நிறுவனத்தில் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடம் 18 லட்சம் சம்பளமாக
வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாகப் பூர்த்தி
செய்து உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள email முகவரிக்கு
17.12.2020-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
hrd@sipcot.in
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS